கூட்டு மேலாண்மை

திரு.டீ.கே.சஞ்ஜீவ சேரசிங்க

பிரதான மனிதவள அதிகாரி

திரு.கிரிஷாந்த சஞ்ஜீவ சேரசிங்க மனிதவளத் துறையில் 1999 ஆண்டிலிருந்து 20  வருடங்களுக்கு  மேற்பட்ட  அனுபவம் கொண்டவர்.  2021 ஜனவரியில் பிரதேச அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொண்டார்.  ஸ்ரீ ஜயவரர்தனபுர பல்கலைகழகத்தில்  மனிதவள முகாமைத்துவத்தில் விஷேட இளமானி பட்டம் பெற்றுள்ளதுடன்,  மனிதவள முகாமைத்துவத்தில் அதே பல்கலைகழகத்தில் முதுமானி பட்டமும்  பெற்றுள்ளார். அத்துடன் ஜப்பான், டோக்கியோவில் ஒட்டுமொத்த தரத்தினூடான மனிதவள முகாமைத்தும் எனும் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்.

திரு.கிரிஷாந்த   பொதுத் துறை மற்றும் தனியாார் துறை நிறுவனங்களில், கூட்டாண்மை மற்றும் இடைநிலை முகாமைத்துவ பதவிகளில் தனது பணித்துறையை ஆரம்பித்துள்ளார்.  இவர் 2014/2015 ஆண்டுகளில் தேசிய சேமிப்பு வங்கியில் மனிதவள அபிவிருத்தி பிரதி பொது முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

திரு. குமுது ஜயசுந்தர

பிரிவூத் தலைவர் – வணிக செயற்பாடுகள்

திரு. குமுது ஜயசுந்தர அவர்கள் கடன் முகாமைத்துவம் (Credit Management), திறைசேரி நடவடிக்கைகள் (Treasury Operations), அறவீடுகள் (Recoveries) மற்றும் கிளை வங்கித் தொழில் ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவத்தைக் கொண்ட ஒரு சிறந்த நிதி மற்றும் வங்கித்துறை நிபுணராவார். அவரது வாழ்க்கைப்பாதை, கல்வித் தகைமை, சட்ட அறிவு மற்றும் நடைமுறைச் செயல்பாட்டுத் தலைமைத்துவம் ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவையை வெளிப்படுத்துகிறது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பட்டதாரி நிறுவனத்தில் (PIM) வங்கி மற்றும் நிதித்துறையில் முதுகலை வணிக மேலாண்மை (MBA) பட்டம் பெற்றுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கிருஷிப் பொருளாதாரத்தில் (Agricultural Economics) இளங்கலை (கௌரவ) பட்டத்தை பெற்றுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் பக்கிங்ஹாம்ஷையர் நியூ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலை (LLB Hons) பட்டத்தைப் பெற்றுள்ளமை அவரது பல்துறை கல்வி அடித்தளத்தை மேலும் பலப்படுத்துகிறது.

அத்துடன், இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தில் (ICM Sri Lanka) கடன் முகாமைத்துவ டிப்ளோமா பெற்றுள்ளமை, கடன் மற்றும் நிதிசார் இடர் முகாமைத்துவத்தில் அவருக்குள்ள விஷேட நிபுணத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

RDB வங்கியில் இணைவதற்கு முன்னர், அவர் இலங்கை வர்த்தக வங்கியில் (MBSL) கிளைச் செயல்பாடுகள் மற்றும் தங்கக் கடன்கள் பிரிவின் தலைவராகவும், நிலையான வைப்புக்கள், சேமிப்பு மற்றும் திறைசேரி பிரிவின் உதவிப் பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன்னர், இலங்கை வங்கியின் துணை நிறுவனமான செய்லீஸ் லிமிடெட் (Ceylease Limited) நிறுவனத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகப் (COO) பணியாற்றியுள்ளார். மேலும், செய்லின்கோ இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரியால்டி (Ceylinco Investment & Realty Ltd) நிறுவனத்தில் கடன் பிரிவின் உதவிப் பொது முகாமையாளராகப் பணியாற்றி, அங்கு கடன் போர்ட்ஃபோலியோ முகாமைத்துவம் மற்றும் கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்துள்ளார்.

கலாநிதி.ஏ.எஸ்.கே.பி.ரத்நாயக்க

தலைமை தகவல் அதிகாரி (செயல்)

B.Sc. – MIS – National University of Ireland
Master of Business Administration – Leeds Metropolition University.
PHD – Aldersgate Collage

திரு.ஜே.ஏ.டி.விஜயபண்டார

தலைமை நிதி அதிகாரி 

திரு.கே.எஸ். பிரசன்ன களுஆரச்சி

முதன்மை உள்நாட்டு கணக்காய்வாளர்