விவசாயக் கடன்கள்

சுனுடீ வங்கியானது, விவசாயிகளின் நெற்பயிர்செய்கை, சோயா அவரை பயிர்ச்செய்கை மற்றும் அவர்களின் உற்பத்திகளுக்கு 270 நாட்களுடைய சிறியதொரு இடைவெளியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தை விலையினை அடையும் வரையில் களஞ்சியப்படுத்தல் முதலியவற்றிற்கு கடன் வழங்கும் எமது நாட்டின் ஒரு சில நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். சோயா அவரை பயிரிடும் விவசாயிகள், அதிகப்படியான விளைச்சல் காரணமாக விலையில் பாரியதொரு சரிவினை சந்தித்தவேளையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கிய முன்னணி நிறுவனமாகும். இக் கடன்களும் சலுகை வட்டி வீதங்களுடன் குறைந்த பிணையில் வழங்கப்படுகின்றன.

நோக்கம்

விவசாய அபிவிருத்தி

வட்டி வீதம்

16%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்/அசையும் சொத்துக்கள்/அசையா சொத்துக்கள்

கடன் தொகை

குறித்த திட்டத்திற்கு அமைவானது

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

ஐந்து வருடங்கள்

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (அடகு மற்றும் மீட்பு)
கடன் பிரிவு