மீன்பிடித்துறைக்கான கடன்கள்

மீன்பிடித்துறைக்கான கடன்கள், சமூக அபிவிருத்திக்காக சலுகை வட்டி வீதங்களுடன் குறைந்த பிணையில் மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பலநாள் மீன்பிடி படகுகள் மற்றும் ஏனைய சிறிய படகுகளை கொள்வனவு செய்வதற்காகவும் வழங்கப்படுகிறது. மேலும் RDB வங்கியானது, உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் அலங்கார மீன்களின் பெருக்கத்திற்காகவும் விசேட கடன்களை வழங்குகின்றது.

நோக்கம்

உள்நாட்டு, கடல்சார், அலங்கார மீன்பிடித்துறை அபிவிருத்தி

வட்டி வீதம்

16%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்/அசையும் சொத்துக்கள்/அசையா சொத்துக்கள்

கடன் தொகை

குறித்த திட்டத்திற்கு அமைவானது

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

ஏழு வருடங்கள்

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (அடகு மற்றும் மீட்பு)
கடன் பிரிவு