வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்ட RDB தெஹியத்தகண்டி கிளை திறந்து வைக்கப்பட்டது

பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.மஹிந்த சாலிய அவர்களின் அழைப்பில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்களினால் ஒக்டோபர் 18 ஆம் திகதி புதிய கிளை வளாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலக் இராஜபக்ஷ , வங்கியின் பொது முகாமையாளர் திருமதி.தமித்தா கே. இரத்நாயக்க உட்பட பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர். வாடிக்கையாளர்கள் பலரின் பங்கேற்புடன் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெற்ற இவ் வைபவத்தில் நிதிச் சேவைகள் வழங்குதல் உட்பட சில நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவ் வைபவத்தில்

 வங்கியின் கிழக்கு பிராந்திய பொது முகாமையாளர் (பதில்) திரு.அதுல குமார உட்பட வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

பட்டி