களஞ்சியசாலை வசதிகள்

விவசாயிகள் இலகுவாக வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கும், தமது விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து விலகிக்கொள்ளவும் உலக வங்கியின் உதவியுடன் கைமாற்றத்தக்க களஞ்சியசாலை பெறுகை முறைமையினை இலங்கை அறிமுகப்படுத்தியது. இது உற்பத்தி பரிமாற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்ட மிகப் பிரதானமானதொரு படிமுறையாகும். இது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. குறித்த உற்பத்திப் பொருளை குறித்த நபருக்கு கொண்டு சென்று விநியோகிக்காமலே, அவை பண்டகசாலையில் களஞ்சியப்படுத்தியிருக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றை உரிமை மாற்றம் செய்வதற்கான வாய்ப்பினை களஞ்சியசாலை பெறுகை முறைமை வழங்குகிறது.

இப் பெறுகைக்காக வழங்கப்படும் கைமாற்றத்தக்க வசதிகளுடைய ரசீதுகளை குறித்த நபரால் பெற்றுக்கொள்ளப்படும் வங்கிக்கடன்களுக்கான அடமானமாகவும் பயன்படுத்தக் இயலும். பண்டகசாலை பெறுகைகளுக்கான நிதியிடலானது களஞ்சியப்படுத்தலின் ஊடாக விவசாயிகளுக்கு பெறுமதிசேர் சேவைகளை வழங்குதல் மற்றும் உற்பத்திகள் களஞ்சியப்படுத்தப்படும் போதே அவற்றுக்கான கடன்களை பெற்றுக்கொள்ள வழியமைத்தல் போன்ற இரட்டை நோக்கங்களை கொண்டது. இது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் பிரசன்ன பிரேமரத்தின அவர்கள் “சன்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு கருத்து வெளியிடும் போது, இத்தகைய செயற்றிட்டங்கள் விவசாய உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் முதன்மை காரணிகளை வலுப்படுத்தல், விவசாயக் குழுவினர் மற்றும் ஏனைய பிரதான பங்குதாரர்களுக்கு பயிற்சியளித்தல், அவர்களின் இயலுமையை கட்டியெழுப்புதல் முதலியனவற்றின் ஊடாக விவசாய உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும், இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவததையும் இலக்காகக் கொண்டுள்ளது.

குறைந்த உற்பத்தித்திறன் வளர்ச்சி, நிதிசார் சேவைகளை பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் நல்ல விவசாயப் முறைகளை உட்புகுத்தும் வேளையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து களஞ்சியப்படுத்தியதன் பின்னர் பின்பற்றவேண்டிய நன்னடத்தைகளினூடாக உற்பத்தியின் தரத்தினை உறுதிப்படுத்தக்கூடிய முறைமை இதுவாகும். அவர் மேலும், பிரதேச அபிவிருத்தி வங்கியானது அண்மையில் 26000 சதுரஅடி பரப்பளவை கொண்டதொரு களஞ்சியசாலையை கலென்பிந்துனுவெவயில் திறந்துவைத்தமை குறித்தும் சுட்டிக்காட்டினார். இக் களஞ்சியசாலையில் விவசாயிகள் தமது தானியங்களை மிகக் குறைந்த கட்டணத்தில் களஞ்சியப்படுத்தக்கூடிய அதேவேளை, இக் கட்டணம் தானிய வகைக்கேற்ப வேறுபடும். இது களஞ்சியப்படுத்தல் தொடர்பாக விவசாயிகளால் முகங்கொடுக்கப்படும் பிரச்சினைகளை தீர்க்கும்.

களஞ்சியசாலையானது பிரதானமாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று இயந்திரங்களுக்காகவும் ஏனைய மூன்றும் 5000 தொன் தானியங்களை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன. அறுவடையின்போது தானியங்களுக்கு எதுவித சிதைவும் ஏற்படவில்லை என்பதனையும், அவை ஈரத்தன்மையுடன் இல்லை என்பதனையும் பரிசீலிக்கக்கூடிய ஸ்டேட்-ஒப்-த-ஆர்ட் எனும் இயந்திர வசதியுடன் கூடியதாக இக் களஞ்சியங்கள் காணப்படுகின்றன. 160 மில்லியன் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இப் பண்டகசாலையே இலங்கையின் முதலாவது பண்டகசாலையாகும். மேலும் மூன்று பண்டகசாலைகள் மன்னார், மொணராகலை மற்றும் அம்பாறையில் எதிர்காலத்தில் கட்டுவிக்கப்படவுள்ளன.

களஞ்சியசாலையினால் பேணப்படும் தரமானது, ஸ்டேட்-ஒப்-த-ஆர்ட் இயந்திரத்தின் உதவியுடன் சீராகப் பேணப்படும். களஞ்சியப்படுத்தப்பட்ட அறுவடைகளுக்கு உயர் பாதுகாப்பினை வழங்குவதற்காக பண்டகசாலைக்கு 24 மணிநேர பாதுகாப்பு மதிப்பீட்டு சேவை வழங்கப்படும் அதேவேளை, இருப்புகள் முற்றாக காப்புறுதி செய்யப்படும். இத் துறையில் ஈடுபட்டு ஒரு சில மாதங்களில் வெள்ளப்பெருக்கு அல்லது வரட்சி நோய்கள் காரணமாக அறுவடை காலத்திலே பெரும் பிரச்சினைகளுக்கு விவசாயிகள் முகங்கொடுத்தனர். விவசாயிகளுக்கு தமது அறுவடைகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்கான வசதியின்மையினாலும் சந்தையில் அதிகப்படியான தானிய நிரம்பலால் சந்தை விலை குறைவதனாலும் அறுவடைகாலங்களில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் கடன்கள் காரணமாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இறுதியில் விவசாயியிடம் இருந்து அறுவடைகளை கொள்வனவு செய்யும் இடைத்தரகர்ஃ முகவர் தன் களஞ்சியசாலையிலே அவற்றை சேமித்து குறித்த தானியத்திற்கான சரியான கேள்வியெழுந்து அதன் விலை உயரும் வேளையில் அத் தானியங்களை அதியுயர் விலையில் இறுதி கொள்வனவாளருக்கு விற்பனை செய்வார். இது இலாபகராமாக அமையும்.

தானியங்கள் சரியான முறையில் களஞ்சியப்படுத்தப்படாவிடின் விலங்குகள் மற்றும் பூச்சிகளால் விவசாயிகளின் அறுவடைகள் சேதப்படுத்தப்படும். கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு களஞ்சியப்படுத்தல் சேவையை வழங்கும் முயற்சியில் குறித்த சில நிறுவனங்கள ஈடுபட்டன. இருந்த போதிலும் அனுபவமிக்க விவசாயியான அநுராதபுரத்தின் இஹலகமயை சேர்ந்த ரீ.பீ. செனவிரத்ன அவர்கள், இச் செயற்றிட்டங்கள் விவசாயிகள் தொடர்பில் நேர்மறையான சிந்தனையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். அநுராதபுரத்தின் இஹலகமயை சேர்ந்த மற்றொரு விவசாயியான உபுல் பண்டார அவர்களிடம் இப் பிரச்சினைகள் தொடர்பில் வினவிய போது, அறுவடைகாலங்களில் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அவர் தெரிவித்திருந்தார். அவற்றுள் மிக முக்கிய பிரச்சினையானது உள்நாட்டு வர்த்தரகர்களுடன் போட்டியிட முடியாமை என்பதாகும். மேலும் பயிர்ச்செய்கைக்குத் தேவையான தானிய விதைகள் மற்றும் உரம் மட்டுமல்லாமல் வீட்டுப் பாவனைக்கான பொருட்களும் வருடந்தோறும் கடனடிப்படையில் வர்த்தகர்களால் வழங்கப்படுகின்றன. அறுவடை செய்ததன் பின்னர் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லையென்பதலால், அவர்களது கடன்களை அடைக்க தமது அறுவடைகளை வர்த்தகர்களுக்கு குறைந்த விலையில் விற்க நேரிடுகிறது எனவும் தெரிவித்தார். மேலும் இரண்டு டிரக்டர் வண்டிகளின் உரிமையாளரான பண்டார அவர்கள், வர்த்தகர்களிடம் 10 டிரக்டர்கள் இருப்பதால் தான் அடிக்கடி, விரைவாக அறுவடைகளை ஏற்றிசெல்லவேண்டியிருப்தகாகவும், இதனால் விவசாயிகள் தமது அறுவடைகள் பொதிசெய்யப்பட்டு அப்பால் எடுத்துசெல்லப்படுகின்றனவா என்பதை சந்தேகத்துடன் அடிக்கடி பார்த்துக்கொள்ளவேண்டி ஏற்படுகின்றதெனவும் தெரிவித்தார்.

இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வாகவே 100% அரசுக்கு சொந்தமான RDB வங்கியானது கடந்த 30 வருடங்களாக விவசாயத் துறைக்கான கடன் வசதிகளை வழங்கிவருகிறது. இதனால் இது தொடர்பில் மனம் நிறைந்த ஆர்வங்கொண்ட விவசாயிகள், அவர்களது அறுவடை அவர்களிடத்திலேயே பாதுகாக்கப்படுவதை எண்ணி ஓய்வாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது.