இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களின்படி 31.08.2021 திகதி வரையில் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச அபிவிருத்தி வங்கி முன்னெடுத்துள்ளது.
தகுதி பெறும் கடன்பட்டவர்கள்
கோவிட் 19 மூன்றாம் அலை காரணமாக தொழில் இழப்பு, வருமான இழப்பு அல்லது வருமான /சம்பள குறைவு வியாபாரம் மூடப்பட்டமை போன்ற காரணங்களினால் நிதி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் நபர்கள் மற்றும் வியாபாரங்கள் /தொழில் முயற்சிகள் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் கோருவதற்கு தகுதி பெறுவர். (2021.05.15 ஆம் திகதியில் செயற்படும் மற்றும் செயற்படா நிலமைகளிலுள்ள கடன் வசதிகள் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க கருத்திற் கொள்ளப்படும்)
எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் சுற்றறிக்கைகளின் கீழ் தற்பொழுது நிவாரணங்களை அனுபவித்து வருபவர்கள்,
01) 2021 மார்ச் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 03/2021 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி
பயணிகள் போக்குவரத்து துறைசார்ந்த நடவடிக்கைகளுக்கு பெற்ற குத்தகை வசதிகைள செலுத்துதலை பிற்போட்ட தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள்,
02) 2021 மார்ச் 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட 04/2021 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி
கோவிட் 19 பரவலினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலா துறைசார்ந்த நடவடிக்கைகளுக்கு
பெற்ற கடன் வசதிகளை மீள்செலுத்துதலை பிற்போட்ட தனிநபர்கள் மற்றும்
வியாபாரங்கள்,
மற்றும்
03) சலுகை அடிப்படையிலான நிபந்தனைகள் மற்றும் வரையறைகளின் அடிப்படையில்
விஷேட திட்டங்களின் கீழ் கடன் பெற்றவர்கள்
ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள தகுதி பெறமாட்டார்கள்.
பின்வரும் ஒரு வழிமுறையை பின்பற்றி வாடிக்கையாளர்கள் தமது கோரிக்கைகளை 2021.06.21 ஆம் திகதிக்கு முன்னர் வங்கிக்கு முன்வைக்கலாம்.
A) வழங்கப்பட்டுள்ள மாதிரி படிவத்திற்கேற்ப தமது கோரிக்கைகளை RDB கிளைக்கு
கையளித்தல்.
B) www.rdb.lk இணையதளத்தில் காட்டப்பட்டுள்ள படிவத்திற்கேற்ப உரிய கோரிக்கைகளை
covid19@rdb.lk எனும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்தல்.
-
செயற்படும் கடன்களுக்கான விண்ணப்ப படிவம் : சிங்களம் | தமிழ் | ஆங்கிலம்
-
செயற்படா கடன்களுக்கான விண்ணப்ப படிவம்: சிங்களம் | தமிழ்| ஆங்கிலம்