திருமதி.தமிதா குமாரி  இரத்நாயக்க

பதில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி

நிதித்துறையில் நன்கு அறியப்பட்ட திருமதி.தமிதா குமாரி இரத்நாயக்க, ஒரு தசாப்சத்துக்கும் மேலாக நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் இயக்குனராக அனுபவம் பெற்ற இவர் தற்பொழுது வரையிலும் கடமையாற்றி வருகின்றார். இவர் மக்கள் வங்கியின் இயக்குனராகவும் தேசிய சேமிப்பு வங்கியின் பதில் பொது முகாமையாளராகவும் கடமையாற்றியவர் ஆவார்.தற்பொழுது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இயக்குனர் ஒருவராகவும் பதவி வகிக்கின்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் முகாமைத்துவ நிர்வாக பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைகழகத்தில் நிதிசார் பொருளியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைகழகத்திலிருந்து பொருளாதார கொள்கையில் முதுகலை பட்டத்தினையும் பெற்றுள்ளார். திருமதி.இரத்நாயக்க குருநாகலை மளியதேவ பெண்கள் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார்.

பட்டி