14 ப்ளஸ்

RDB 14+ கணக்கானது, இளம் சமூகத்தினரிடையே சேமிப்புப் பழக்கத்தை தூண்டுமொரு விசேட சேமிப்புக் கருவியாக RDB  வங்கியினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

14 வயதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலிருந்து பழக்கப்படுத்திக்கொள்ளப்படும் சிக்கனமும் சேமிப்புப் பழக்கமும் பாதுகாப்புமிகு எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக அமையும் என்றால் மிகையாகாது எனலாம். எனவே, RDB 14+ ஆனது 14 வயதிற்கு மேற்பட்ட கட்டிளமைப்பருவத்தினரை கவரும் வகையிலான பெறுமதிசேர்க்கைகளோடு செயற்படுத்தப்படுகின்றது.

RDB 14+ கணக்கினால், கணக்கு மீதியின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 30% போனஸ் வட்டிக்கு மேலதிகமாக உயர்வட்டி வீதமும் வழங்கப்படுகிறது. 14 வயதிற்கும் மேற்பட்டோர் ATM அட்டையினூடாக தமக்கு அவசியமான பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர்கள் அதிகப்படியான பணத்தினை தன்னிடம் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. அதே போல பாடசாலை மாணவர்கள் அவர்களின் அவசர நிதித்தேவைகளுக்காக ATM அட்டையை பயன்படுத்தி பணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் பாதுகாவலரின் தொலைபேசி இலக்கத்திற்கு அது தொடர்பான விபரங்கள் குறுந்தகவலூடாக அனுப்பிவைக்கப்படும்.

தனக்கேயான இல்லம், வாகனம், தளபாடங்கள், வியாபாரம், இலத்திரனியல் உபகரண கொள்வனவு, கல்விசார் தேவைகள், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் முதலிய இளம் சமூகத்தினரின் கனவுகளை நனவாக்குவதற்கான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன அத்தோடு அவற்றிற்கான ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படுகின்றன. மேலும் கணக்குரிமையாளரின் தாய் அல்லது தந்தையின் மறைவின்போது அல்லது பிள்ளைகளின் சுகயீனத்தின்போது கணக்குரிமையாளருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும்.

அனைத்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளும் அவர்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும் குறுந்தகவலின் மூலமாக அறியப்படுத்தப்படும்.