கெக்குளு

RDB கெக்குளு என்பது 12 வயதிலும் குறைந்த சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதொரு சேமிப்புத் திட்டமாகும். எமது தாய்நாட்டின் ஒவ்வொரு பிள்ளையும் தன் எதிர்காலத்திற்காக RDB யுடன் இணைந்து சேமிக்க வேண்டுமென்பதற்காக RDB கெக்குளு சேமிப்புக் கணக்கினை ஆரம்பிக்க தேவையான மிகக்குறைந்த வைப்புத்தொகை ரூபா.100 இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேமிப்புத்திட்டத்தின் கீழ் புதிய கணக்கொன்றை ஆரம்பிக்கும்வேளையில் கவர்ச்சிமிகு உண்டியலொன்று பரிசாக வழங்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், கணக்குமீதிகளுக்கு தகுந்தாற்போல் விசேடமாக வடிவமைக்கப்பட்ட வலம்புரி உண்டியல்கள், குவளைகள், பாடசாலைப் பைகள், பரிசுச் சீட்டு மற்றும் சிறுவர் சைக்கிள்கள் முதலிய மேலும் பல பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

இக் கணக்கானது பிரதானமான மூன்று நோக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டது. அவையாவன, சிறந்ததொரு எதிர்காலத்திற்காக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை தூண்டுதல், சிறுவர்களின் கல்விக்கு உதவிபுரிதல் மற்றும் அவர்கள் நாட்டின் சிறந்த குடிமக்களாக மிளிர உதவுதல். கணக்க வைத்திருப்போரில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வோருக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், மேற்படி பரீட்சைக்குத் தோற்றும் கணக்கு வைத்திருப்போருக்கு விசேட கருத்தரங்குகளும் ஒழுங்குசெய்யப்படுகின்றன.

பட்டி