கூட்டு மேலாண்மை

திரு.ஏ.எச்.எம்.எம்.பி.ஜயசிங்க

பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி

திரு. A.H.M.M.B. ஜயசிங்க, 1986 இல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்திற்கான விசேட இளமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்ட பட்டதாரியாவார். மேலும் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின், வங்கி முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமாவினையும், வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா மற்றும் M.B.A. யினையும் இலங்கை NIBM இன் பிராந்திய அபிவிருத்தியில் முதுகலை டிப்ளோமாவினையும் பெற்றுக்கொண்டார். பட்டப்படிப்புகளின் பின்னர், 1987 இல் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்துகொண்டு கிளை முகாமையாளராக, வலய முகாமையாளராக, மாவட்ட முகாமையாளராக, பிரதம முகாமையாளராக, உதவிப் பொது முகாமையாளராக மற்றும் பிராந்திய பொது முகாமையாளரென பல்வேறு முகாமைத்துவ மட்டங்களில் கடமையாற்றினார். ஏ.எச்.எம்.எம்.பீ. ஜயசிங்க அவர்கள் 35 வருடங்களுக்கும் அதிகமாக வங்கித்துறையில் சேவையாற்றி வருகிறார் என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.

திரு.வஜிர ஜயசிங்க

பிரதான தகவல் அதிகாரி

இருபது வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் வாய்ந்ததொரு தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜயசிங்க, 2011 ஜுன் மாதம் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்துக்கொண்டார். இவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியலில் இளமானிப் பட்டதாரியாவார். அதுமட்டுமல்லாமல், தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலுக்கான முதுநிலை பட்டத்தையும், ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பட்டப்படிப்பின் பின்னர், IBM உலக வியாபார கூட்டமைப்பில் நெறிமுறை பொறியியலாளராக தனது தொழிற் தகைமையை ஆரம்பித்தார். நிதிச் சேவைகள் மற்றும் வங்கித்துறையில் ஐம்பது வருடத்திற்கும் மேலாக சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளையேற்று சிறப்பாக செயற்பட்டு வருகிறார். பிரித்தானிய கணனி சமூகத்தின் சான்றுபடுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிபுணரும், அமெரிக்க திட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் திட்ட முகாமைத்துவ வல்லுநருமாவார். ஜயசிங்க அவர்கள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பட்டய பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திரு.பி.சுமேத எதிரிசூரிய

பிரதான நிதியியல்  அதிகாரி

திரு.சுமேத எதிரிசூரிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் 1992 ஆம் ஆண்டு வியாபார நிர்வாகத் துறையில் விஷேட இளமானி பட்டம்  பெற்றுள்ளார்.  இவர், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினராவார்.  அத்துடன் கொழும்பு பல்கலைகழகத்தில் வியாபார நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும்  பெற்றுள்ளார்.  திரு.எதிரிசூரிய கணக்காய்வு, வரி ஆலோசனை முகாமைத்துவம், வங்கி மற்றும் நிதியியல் ஆகிய துறைகளில் , ஹேர்னஸ்ட் & யங் -கொழும்பு, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் செலான் வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களில்  பணியாற்றியுள்ளார்.  இவர் 2017 ஜனவரியில் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து கொண்டார். பிரதேச அபிவிருத்தி வங்கியில், பிரதான நிதியியல் அதிகாரியாக நியமனம் பெறுவதற்கு முன்னர், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் பிரதான நிதியியல் அதிகாரி, இணக்கப்பாடுகள் அதிகாரி மற்றும் பதில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

 

திரு.டீ.எம்.ரி.எஸ்.குமார

பிரதி பொது முகாமையாளர் – செயற்பாடுகள் மற்றும் வணிக துணைச் சேவைகள்

திரு.குமார வங்கித் துறையில் 30 வருடகால அனுபவம் உள்ளவர். இவர் 1991 ஆம் ஆண்டு  முன்னைய பொலன்னறுவை பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கியில் (RRDB) இணைந்து கொண்டார். வங்கி உதவியாளர், முகாமையாளர்,  சிரேஷ்ட  முகாமையாளர், பிரதான முகாமையாளர், உதவி பொது முகாமையாளர் மற்றும் ஊவா மற்றும் வடமேல் மாகாண பிராந்திய பொது முகாமையாளர் ஆகிய பல்வேறு மட்டங்களில் பணியாற்றியுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வியாபார நிர்வாக விஷேட பட்டதாரியாவார் என்பதுடன் களனி பல்கலைகழகத்தில் முதுமானி பட்டத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன் இலங்கை வங்கியாளர் சங்கத்தின் இடைநிலை பரீட்சையிலும் சித்தியெய்தியுள்ளார்.

திரு.ஏ.எச்.எம்.ஜி.அபேரத்ன

பிரதி பொது முகாமையாளர் –  கடன் & சிறப்பு திட்டங்கள் மற்றும் கொள்கை அமலாக்கம்

திரு.ஏ.எச்.எம்.ஜி.அபேரத்ன களனி பல்கலைகழகத்தின் வணிக இளமானி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளார்.1986 ஆம் ஆண்டு  வயம்ப பல்கலைகழகத்தின் வியாபார முதுமானி பட்டத்தினைன பெற்றுள்ளதுடன், இலங்கை திறந்த பல்கலைகழகத்ததின் நுண்நிதியியல் துறை பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு பிரதேச கிராமிய அபிவிருத்தி வங்கியில் இணைந்த இவர்,கிளை முகாமையாளர்,பிரதான முகாமையாளர்,உதவி பொது முகாமையாளர் மற்றும் வடமத்திய பிராந்திய பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திரு.டீ.கே.சஞ்ஜீவ சேரசிங்க

பிரதான மனிதவள அதிகாரி

திரு.கிரிஷாந்த சஞ்ஜீவ சேரசிங்க மனிதவளத் துறையில் 1999 ஆண்டிலிருந்து 20  வருடங்களுக்கு  மேற்பட்ட  அனுபவம் கொண்டவர்.  2021 ஜனவரியில் பிரதேச அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொண்டார்.  ஸ்ரீ ஜயவரர்தனபுர பல்கலைகழகத்தில்  மனிதவள முகாமைத்துவத்தில் விஷேட இளமானி பட்டம் பெற்றுள்ளதுடன்,  மனிதவள முகாமைத்துவத்தில் அதே பல்கலைகழகத்தில் முதுமானி பட்டமும்  பெற்றுள்ளார். அத்துடன் ஜப்பான், டோக்கியோவில் ஒட்டுமொத்த தரத்தினூடான மனிதவள முகாமைத்தும் எனும் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்.

திரு.கிரிஷாந்த   பொதுத் துறை மற்றும் தனியாார் துறை நிறுவனங்களில், கூட்டாண்மை மற்றும் இடைநிலை முகாமைத்துவ பதவிகளில் தனது பணித்துறையை ஆரம்பித்துள்ளார்.  இவர் 2014/2015 ஆண்டுகளில் தேசிய சேமிப்பு வங்கியில் மனிதவள அபிவிருத்தி பிரதி பொது முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

திரு ஈஏ டி ஜனிதா பிரியஷாந்த

தலைமை உள் தணிக்கையாளர்

திரு. ஜனித பிரியஷாந்த 27 ஜூன் 2022 முதல் பிராந்திய அபிவிருத்தி வங்கியில் இணைந்தார். திரு. பிரியஷாந்த இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும் மற்றும் பட்டய முகாமைத்துவ நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார். கணக்காளர்கள் ஆஸ்திரேலியா மற்றும் இரண்டாம் மேல் பிரிவுடன் B Com சிறப்புப் பட்டம் பெற்றவர். மக்கள் வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வங்கி நிதி மற்றும் தணிக்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.